யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு 

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு 
  • :

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் 02/12/2025 மு.ப10.00 வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16621 குடும்பங்களை சேர்ந்த 52892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை தென்மராட்சி,நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம்,காரைநகர்,நல்லூர்,கோப்பாய், உடுவில்,தெல்லிப்பளை,மருதங்கேணி,ஊர்காவற்றுறை,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டன. இன்று சீரான காலநிலை காரணமாக சில பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் வீடு திரும்பியதால் தற்போது 803 குடும்பங்களைச் சேர்ந்த 2570 அங்கத்தவர்கள் 34 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

11357 குடும்பங்களை சேர்ந்த 35761 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை  2 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 332 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 

Related Articles