ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாம் முதன்மையாக நலனை வழங்க வேண்டியது, பொதுமக்களுக்கா? அல்லது அதிகாரிகளுக்கா? - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன
"அரசாங்கம் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார மாற்றத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த வகையில், நாம் பொதுமக்களுக்கா அல்லது அதிகாரிகளுக்கா? முதன்மையாக நலனை வழங்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்," என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
மீமுரே மக்களின் போக்குவரத்து வசதிகளை நெறிப்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திலிருந்து மீமுரே பகுதிக்கு ஒரு பேருந்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மீமுரே மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக 2021 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இரண்டு பேருந்துகளில், ஒரு பேருந்து மட்டுமே அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, மற்ற பேருந்து இதுவரை இலங்கை போக்குவரத்து சபை தலைமையகத்தின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவின் தலையீட்டால், அந்தப் பேருந்தையும் இன்று மீமுரே மக்களிடம் கையளிக்கப்பட்டது.


