ஒரு பயணம், அதன் ஆரம்பத்திற்கு முன்னதாக சிறியதும், கண்ணுக்குப் புலப்படாததும், ஆனால் அமைதியான ஒரு செயல்முறை நிகழ்கிறது

ஒரு பயணம், அதன் ஆரம்பத்திற்கு முன்னதாக சிறியதும், கண்ணுக்குப் புலப்படாததும், ஆனால் அமைதியான ஒரு செயல்முறை நிகழ்கிறது
  • :

ஒரு பயணம், அதன் ஆரம்பத்திற்கு முன்னதாக சிறியதும், கண்ணுக்குப் புலப்படாததும், ஆனால் அமைதியான ஒரு செயல்முறை நிகழ்கிறது.

எஹி பஸ்ஸிகோ அமைதிக்கான நடை பயணத்தின் இந்தப் புகைப்படங்கள் அதற்கான சாட்சியங்களாக விளங்குகின்றன.

ஒரு ஆலமரத்தின் நிழலில்,
காய வேண்டி தொங்க விடப்பட்ட காவியுடைகள்
அது வெறும் உடை மட்டுமல்ல,
அவர்களின் இருத்தலைப் பற்றிய ஒரு ஓவியம்.

கூடாரத்தினுள் விழும் ஒளி,
காவி நிறத்தில் மென்மையாகி,
உள் வெளியை நிசப்தமாக்கியிருக்கிறது.

இங்கிருக்கும் பிக்குகள் யாத்திரிகர்கள் அல்லர் —
அவர்கள் தங்கி நிற்பவர்கள்

வெளி உலகம் பயணத்திற்கு ஆயத்தமாகும் வேளையில்,
இங்கே கேட்கப்படுவது மூச்சின் ஓசை மட்டுமே.
மனித பிணைப்பு இங்கே மெல்ல நுழைகிறது —
வழங்கப்பட்ட தானம், நீட்டப்பட்ட கரம்,
ஆசி பெறும் குழந்தை.
இவை பயணத்திற்கு மேலதிகமானவை அல்ல —
இவையும் பயணத்தின் அர்த்தத்தில் இணைகின்றன.
இங்கே ஒரு செயல்பாடு இருக்கிறது —
கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் இன்றியமையாத.
உறுதியாக கட்டப்படும் கயிறுகள்,
ஒழுங்கமைக்கப்படும் காவியுடை
ஒரு பயணத்தை மேற்கொள்ள தயாராகும் உடல்.
இளைப்பாறுதலும் இங்கே ஒரு செயல் —
அடுத்த அடிக்கு சுமை சேர்க்கும் மௌனம்.
இந்த அனைத்துப் படங்களையும் இணைப்பது ஒரு செயலினால் அல்ல —
ஆயத்தமாவதாலேயே

களனி ரஜமஹா விஹாரையில் இருந்து வெளியேறுவதற்கான ஆயத்தம்
மௌனத்தை ஒலியாக மாற்றுவதற்கான ஆயத்தம்.
உள் சமாதானத்தை வெளி உலகிற்கு மாற்றுவதற்கான ஆயத்தம்.

இந்தத் தொடக்கத்திற்கு முந்தைய தருணத்தின் அமைதியில் —
நடக்காவிட்டாலும்,
சமாதானம் உணரப்படுகிறது...

 

 

 

Related Articles