ஓய்வூதிய தின தேசிய நிகழ்வு ஒக்டோபர் 8ம் திகதி களனி வெதமுல்ல விடுதியில் ஓய்வூதிய சம்பள பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி

ஓய்வூதிய தின தேசிய நிகழ்வு ஒக்டோபர் 8ம் திகதி களனி வெதமுல்ல விடுதியில் ஓய்வூதிய சம்பள பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி
  • :

ஓய்வூதிய தேசிய நிகழ்வு ஒக்டோபர் 8 திகதி களனி வெதமுல்ல விடுதியில் பொது நிருவாகம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபேரத்ன தலைமையில் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஓய்வூதிய சம்பளப் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.


தேசிய ஓய்வூதிய சம்பள தினம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 8ம் திகதி தேசிய ஓய்வூதிய தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் இம்முறை தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஓய்வூதிய சம்பள பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.


இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் "வலுவான, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் பறந்து காணப்படும் ஓய்வூதிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக சிலரை இந்த இடத்திற்கு அழைத்து அவர்களுக்காக விசேட வைத்திய முகாம் ஒன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.


ஓய்வூதியக் காரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் இதன் போது இடம் பெறவுள்ளன.

 

விசேடமாக சம்பளத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ஓய்வூதிய தகவல் உள்ளடங்கிய செய்தித்தாள் ஒன்றும் இதன் போது வெளியிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles