பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கெளரவ மேஜர் ஜெனரல் நய்யார் நஸீர் (Nayyar Naseer), HI (M) (ஓய்வு), (மே 05) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
உயர் ஸ்தானிகரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர் இலங்கையில் அவரது தூதரகப் பதவிக்காலத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை, குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது.
இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் துணை உயர் ஸ்தானிகர் Ms. Zunairq Latif மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் (Defence Attaché) ஆகியோரும் கலந்து கொண்டனர்.


