பல குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

  • :

எக மிடட கொவி பிமட, வாரி மஹிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து, மொனராகலை மாவட்டத்தில் உள்ள புதுருவஹின்ன குளம், யபரத்தாவ குளம் மற்றும் மீயகெட்டு ஆர குளம் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவின் பங்கேற்புடன் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புதுருவஹின்ன குளம் புனரமைப்புக்காக பதினொரு மில்லியன் ரூபாயும், யபரத்தாவ குளம் புனரமைப்புக்காக பதினான்கு மில்லியன் ரூபாயும், மீயகெட்டு ஆர குளம் புனரமைப்புக்காக நாற்பத்திரண்டு மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத் திட்டம் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அனைத்து புனரமைப்புப் பணிகளும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles