பழங்குடி மக்களுக்கான மூலிகை விவசாயத் திட்டம்

பழங்குடி மக்களுக்கான மூலிகை விவசாயத் திட்டம்
  • :
 
ஊவா மாகாணத்தின் கலாச்சார அமைச்சின் அனுசரணையில் மஹியங்கனை பிரதேச செயலகத்தினால் பழங்குடி சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மூலிகை செய்கை திட்டமொன்று அண்மையில் (10) தம்பானை குருகும்புர பழங்குடி மக்கள் மரபுவழி விகாரை வளாகத்தில் நடைபெற்றது.

 பழங்குடி மக்களின் தலைவர் விஷ்வ கீர்த்தி வணஸ்பதி ஊருவரிகே வன்னில அத்தன் தலைமையில் 50 பழங்குடி மக்கள் இதன்போது பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதற்காக தெரிவு செய்யப்பட்ட சணல் இன கஞ்சா செடிகளின் பெறுமதி தொடர்பாகவும், விவசாயப் பின்னணி மற்றும் அறுவடையை கொள்வனவு செய்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் இரண்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
 
இதற்காக கிராந்துருக்கோட்டை மூலிகைத் தோட்ட மத்திய நிலையத்தில் ஆயுர்வேத வைத்தியர் மற்றும் மஹியங்கனை விவசாய ஆலோசகர் ஆகியோர் வளவாண்மை மேற்கொண்டனர்.
இதன் போது பழங்குடி மக்களுக்கான தேவைகள் காணப்படும் விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக பழங்குடி மக்களின் தலைவர் விசேட பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

Related Articles