பல்கேரிய விமான நிறுவனமும் இலங்கையை தனது பயண இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, பல்கேரிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று (21) காலை 180 பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இலங்கை, சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாக திகழ்வதனால் தான் பல்கேரிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்ததாகவும் பல்கேரிய சுற்றுலாப் பயணிகள் சுட்டிக்காட்டினர்.