பனம்பழத்தில் இருந்து வைன் (WINE) தயாரித்தல் தொடர்பாக ஆளுநருக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

பனம்பழத்தில் இருந்து வைன் (WINE) தயாரித்தல் தொடர்பாக ஆளுநருக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்
  • :
பனம்பழத்தில் இருந்து வைன் (WINE) தயாரித்தல் தொடர்பாக ஆளுநருக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

 புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பனம்பழத்தில் இருந்து வைன் (WINE) தயாரித்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (29.10.2025) நடைபெற்றது.
 
இதன் போது, பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைனை (WINE) உற்பத்தி செய்வதற்குத் தாராளமாக மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக காணப்படுவதனால், உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் காணப்படுவதாகவும், கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆளுநருக்கு விளக்கமளித்தார்.
 
இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.
பல மில்லியன் ரூபாய்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
தமது தொழில் முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில் வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான இதன் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Related Articles