ஜனநாயகத்தை மேம்படுத்தும் நோக்கில் வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையின் (WFD) அழைப்பின் பேரில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இங்கிலாந்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் - ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் சீமா மால்ஹோத்ரா அவர்களுடன் கலந்துரையாடல்
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக நிருவாகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இரு தரப்பினருக்குமிடையே கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன், ஜனநாயகத்தை மேம்படுத்தும் நோக்கில் வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளையின் (WFD) அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த உயர்மட்ட உத்தியோகப்பூர்வ விஜயம், பாராளுமன்ற உறவுகளை மேம்படுத்துதல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பயனுள்ள சட்டமன்ற நடைமுறைகளை ஊக்குவித்தல் என்பவற்றை நோக்கமாக் கொண்டது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, நீதித்துறை அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் நாடாளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளர் ஹன்சா அபேரத்ன ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்


