பங்களாதேஷ் மற்றும் பூட்டான் சுகாதார அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன

பங்களாதேஷ் மற்றும் பூட்டான் சுகாதார அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன
  • :
உலக சுகாதார அமைப்பின் 79வது உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பங்களாதேஷ் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை பிரதி அமைச்சர் எம்.ஏ. முஹித் (M.A. Muhit) மற்றும் பூட்டானின் சுகாதார அமைச்சர் டான்டின் வாங்சுக் (Tandin Wangchuk ) ஆகியோரைச் சந்தித்து விசேட இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

 இந்தக் கலந்துரையாடல்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றன. நாட்டின் சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய தொழில்நுட்பம் மற்றும் கல்வி தற்போது முகம் கொடுக்கும் சவால்கள் அத்துடன் குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால தீர்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், அத்துடன் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்வேறு வகையான உதவிகளை நாட்டிற்குப் பெற்றுத் தருவதில் பங்களாதேஷ் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை அமைச்சர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
 
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதாரப் பேரவையின் தலைவர் என்ற முறையில் இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பிராந்திய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் வகையில் விசேட கவனம் செலுத்தி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எஸ். ஸ்ரீதரன், அத்துடன் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் சுகாதார அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்

Related Articles