தூர சேவை பஸ்களுக்கு விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களுக்கு 40 செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) கெமரா கட்டமைப்புகளைப் பொருத்தும் திட்டத்தின் முதற்கட்டமாக கதிர்காமம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது தூர பஸ்கள் சிலவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) கெமரா கட்டமைப்புகளைப் பொருத்திய அமைச்சர், பஸ் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
தனியார் துறையின் தலையிட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாக அது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது இதனால் சாரதிகளின் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு சாரதிகளை தெளிவுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சாரதிகளின் களைப்பு மற்றும் தூக்கம், கண் மூடுதல் போன்றவற்றை கண்காணிப்பதற்கு புதிய கெமரா கட்டமைப்பிற்கு முடியும்.
அதற்கு மேலதிகமாக வீதிச் சட்டங்களை பின்பற்றுதல் மற்றும் இருக்கை பட்டிகளை அணிந்திருத்தல் போன்றவற்றையும் கண்காணித்து சாரதிகளுக்கு சமிக்ஞை காட்டுதல் போன்றவை இந்த கட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும். இது பஸ்களில் முகாமைத்துவம் செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும்


