பதுளையை ‘விளையாட்டு நகரமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டம்

பதுளையை ‘விளையாட்டு நகரமாக’ அபிவிருத்தி செய்யத் திட்டம்
  • :
பதுளை நகரை மையப்படுத்தி, அதனை ஒரு முழுமையான விளையாட்டு நகரமாகவும், நவீன விளையாட்டுத் தொகுதியாகவும் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடலும் விசேட கண்காணிப்பு விஜயமும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஜூலை 07 ஆம் திகதி பதுளையில் நடைபெற்றது.

 பதுளை விளையாட்டரங்கை படிப்படியாக (கட்டங்களாக) நவீன விளையாட்டுத் தொகுதியாக அபிவிருத்தி செய்வது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அடுத்த ஆண்டு முதல் பதுளைப் பிரதேசத்தில் உதைபந்து (Football) மற்றும் றக்பி (Rugby) விளையாட்டு மைதானங்களை விரைவாக மேம்படுத்துவதில் அமைச்சர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

Related Articles