பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து முழு நாடும் கிளீன் ஆகும் என்றும் கிராமம் வரை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை கொண்டு செல்வதாகவும் குழுக்களின் தவிசாளர் பிமல் ரத்நாயக்க நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிளீன் ஸ்ரீலங்கா விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். க்ளீன் ஸ்ரீலங்கா என்பது மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானமாகும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; இனவாதம் இல்லாத சமூகம் ஒன்றை உருவாக்குவதற்குத் தான் நாம் பாடுபடுகிறோம். க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் தமிழ் மொழியிலும் காணப்படுகிறது. தமிழ் மொழியில் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். பிரதமர் ஹரிணி அமரசூரிய கிளீன் ஸ்ரீலங்கா பற்றி கதைக்கவில்லை. மனோ கணேசனுடன் முரண்பட்டதாக ஒரு உறுப்பினர் தெரிவித்தார். பிரதமர் ஹரிணி கிளீன் ஸ்ரீலங்கா பற்றி உரையாற்றிய தெளிவான பதிலை நான் மீண்டும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அது ஹன்சாட் அறிக்கையில் தான் உள்ளது.
மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சிரமதானத்தை ஆரம்பிக்க முடியும். கிளீன் ஸ்ரீலங்கா என்று உருவாக்கப்பட்டது புத்தகமல்ல. அச்சடிக்கப்பட்ட ஆவணமும் அல்ல. பொது அமைப்பு ஒன்றின் விளைவு தான் இந்த கிளீன் ஸ்ரீலங்கா. இன்னும் சிலர் இதில் ஏ யில் இருந்து இசட் வரை எழுதப்பட்ட ஆவணத்தை எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற நெறிமுறை தொடர்பாக நாம் தற்போது செயற்பட்டு வருகிறோம். அதிசொகுசு வாகனங்களில் செல்ல முடியாத நோய் எங்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் பணத்தில் நாங்கள் செல்வதில்லை. எங்களுடைய பெறுமதி ஏழ்மையானது அல்ல. பாராளுமன்றத்தில் சாப்பாடு அந்தக் காலத்தில் பத்து ரூபாய்வுக்கு 15 ரூபாய்க்கு காணப்பட்டது. அதனை அதிகரிப்பதற்கு யோசனை முன் வைத்தது நாம் தான். அரசியல் நெறிமுறையில் தொடங்கி ஒரு சிறந்த நாட்டை கட்டியெழுப்ப நாம் பாடுபடுகிறோம்.