பேர வாவியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்கள் மீண்டும் ஆரம்பம்

பேர வாவியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்கள் மீண்டும் ஆரம்பம்
  • :

பேர வாவியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்களை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (03) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு படியான உள்நாட்டு விமானங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் மற்றொரு படியாக இந்த கொழும்பு-கட்டுநாயக்க விமானம் ஆரம்பிக்கப்படுகிறது. தற்போது இலங்கையில் நீர் விமானங்களை இயக்கும் சினமன் ஏர்லைன்ஸ், இந்த கொழும்பு-கட்டுநாயக்க விமானத்தை செயற்படுத்தும்.

இந்தப் புதிய விமானம் ஆரம்பிப்பட்டதன் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் குறுகிய காலத்தில் கொழும்பு நகரத்திற்கு திறமையாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

 

Related Articles