போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றில் ஈடுபட்டார்.
இதன் போது புகையிரத நிலையத்தில் காணப்படும் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீன மயப்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவ்வாறே பொருட்களை கொண்டு செல்லும் செயற்பாட்டிற்காக தற்போது காணப்படும் முறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னேற்றப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யா ரத்ன, சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திணிது சமன் ஹெண் நாயக்க, ரவீந்திர பண்டார, பதுளை மாநகர முதல்வர் நந்தன ஹப்புகொட உட்பட புகையிரதத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


