போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்திற்கான விசேட நிகழ்வுகள் இன்று (26) மு. ப 10.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது பெருந் திரளானவர்களின் பங்களிப்புடன் நடைபெறும் பாதயாத்திரை உட்பட போதைப் பொருள் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர்.


