2026 ஜனவரி 10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு திருகோணமலைக்கு வடக்கு - வடகிழக்காக ஏறத்தாழ 100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி வடமேற்குத் திசையில் நகர்ந்து இன்று முற்பகல் 5.30 மணியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது இன்று நண்பகலளவில்
திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் வட அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில்100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
குருநாகல், பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை
தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது


