புனித சேவியர் ஆண்கள் வித்தியாலயத்தில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் (03) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு இன மதம் என்ற பிரிவினை அடிப்படையில் பிரிக்கப்பட்டு மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட யுகம் தற்போது அரசாங்கத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வார்த்தைகளுக்கு மாத்திரம் எல்லை படுத்தப்படாது வார்த்தைகளை யதார்த்தமாக உருவாக்கும் புதிய அரசாங்கத்தின் கீழ், விமானத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண சர்வதேச விளையாட்டு மைதானம் மற்றும் இன்று விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள மன்னார் மாவட்ட விளையாட்டு தொகுதியின் நீச்சல் தடாகம் அந்த வார்த்தைகளை நிதர்சனமாக ஆக்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் மன்னார் போன்ற மாவட்டங்கள் கிலோமீட்டர்களில் தூரமாக இருந்தாலும் மனிதர்களின் பெறுமதி அந்த மாவட்டங்களின் தூரம் அற்றவையாக காட்டுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தில் காணப்படும் வரை இந்த நாட்டில் சமய அல்லது இன ரீதியாக மனிதர்களுக்கு இடையில் முரண்பாடு அல்லது பிரிவினை ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வி. பிரேமசந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட செயலாளர், புனித சேவியர் ஆண்கள் பாடசாலையில் அதிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு


