மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ( IMF ) பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (08) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது 2030 ம் ஆண்டளவில் கைத்தொழில் அமைச்சின் இலக்கு மற்றும் உபாய வழிகள் தொடர்பாக பரவலான பகுப்பாய்வொன்றை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் முன்னிலையில் தெளிவுபடுத்தியதுடன், தேசிய உற்பத்திக்கு (GDP) தொழில்நுட்பம் மற்றும் உற்பத்திகளின் பங்களிப்பை அதிகரித்தல், தொழில் முயற்சியாண்மையின் பங்களிப்பு மற்றும் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரித்தல் போன்ற பிரதான உற்பத்தித் திறன் சுட்டிகள் (KPIs) பல தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது
மேலும் அமைச்சின், கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தம், வியாபார நடவடிக்கைகளுக்காக வசதிகளை திட்டமிடும் உபாய வழிகள், மற்றும் உள்நாட்டு கைத்தொழில் எதிர்கொள்ளும் சவால்கள், நிதிக் கொள்கை மற்றும் காணி ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அவ்வாறே கைத்தொழில் அமைச்சின் வெளிப்படைத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ( IMF ) பாராட்டுக்களை தெரிவித்தமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான( IMF ) செயற்பாட்டுத் தலைவர் எவன் பெப்பர் ஜோர்ஜியோ (Evan Papageorgiou), மார்த்தா வேர்ல்டெமிச்சல் (Martha Woldemichael - Resident Representative) , பிரகார்டினி (Ms. Dinar Prihardini - Senior Economist) , உர்சுலா விரியாதினாட்டா , (Ursula Wiriadinata -Economist) மாணவி அபேவிக்ரம, (Manavee Abevawickrama - Local Economist, IMF Resident Representative office) உட்பட பிரதிநிதிகள் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு


