புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, இன்று (ஜன 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோ இலங்கை இராணுவத்தின் (SLA) தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பாதுகாப்பு செயலாளருடனான முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
பாதுகாப்புச் செயலாளர், லெப்டினன்ட் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் குறித்து அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை இராணுவத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதில் அவரது தலைமையின் மீது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் ரோட்ரிகோ கடந்த 31 டிசம்பர் (2024) அன்று இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக கடைமை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.