புத்தளம் மாவட்டத்தின் முதலாவது  சிறிய கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம் 

புத்தளம் மாவட்டத்தின் முதலாவது  சிறிய கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம் 
  • :

புத்தளம் மாவட்டத்தின் முதலாவது சிறிய கடற்கரை பூங்கா மாறவில - சிலுவை தேவாலயத்திற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜெயக்கொடி தலைமையில்  அண்மையில் இடம்பெற்றது. 

சிறிய அளவிலான 100 கடற்கரை பூங்காக்களை நாடு முழுவதும் திட்டத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் ஏழு சிறிய கடற்கரைப் பூங்காக்களை நிறுவுவதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

Related Articles