புத்தளம் மாவட்டத்தின் விவசாய வீதி அபிவிருத்தி ஆரம்பம்

புத்தளம் மாவட்டத்தின் விவசாய வீதி அபிவிருத்தி ஆரம்பம்
  • :
றிய விவசாயக் கைத் தொழிலுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கும் திட்டத்தின் (SARP) கீழ் புத்தளம் மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் சிலவற்றில் விவசாய வீதி அபிவிருத்திப் பணிகள் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்தின தலைமையில் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 ஆணமடுவ, பள்ளம மற்றும் நவகத்தே கம மற்றும் போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் மிகவும் நீண்ட காலத்திற்கு பிரதேசத்தின் விவசாயிகளில் காணப்படும் தேவைகளை பூரணப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் மக புரட்டி ஹேன வாவியின் நீர் செல்லும் பாதையைப் திருத்தும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
18 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான
(ரூபாய் 1,878,959.75) செலவில் இடம்பெறும் இத்திட்டம் மூன்று மாத காலத்திலும் முடிவுறுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதன் பின்னர் பள்ளம பிரதேச செயலாளர் பிரிவில் விவசாய வீதி அவிழ்த்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 43 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் பிரதேசத்தில் விவசாய பொருட்களை போக்குவரத்து செய்வதற்கு பாரிய ஒத்துழைப்பை வழங்குமேன எதிர்பார்க்கப்படுகிறது.
நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் வீரகஸ்வெவ விவசாய வீதி அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் பூககவெவ மற்றும் கொட்டுவல்ல வாவி மற்றும் நீர் செல்லும் பாதை, கொவிப்பள்ளிய, அசிரிகம வெவ மற்றும் வகயா மடு வாவி, வீரவாவி, போன்றவைகளும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
.
IFAD ( விவசாய அபிவிருத்திக்காக சர்வதேச நிதியம்) பங்களிப்பில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் வீதி கட்டமைப்பு பலவற்றை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles