புதுப்பிக்கப்பட்ட திரைப்படக் காப்பக பிரிவின் திறப்பு விழா

  • :

அரசாங்க திரைப்பட பிரிவு மீளமைக்கப்பட்டு மீண்டும் திறக்கும் நிகழ்வு நேற்று (16) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. 

நாட்டின் சுதந்திரத்துடன், இத்தாலியர்களின் தலையீட்டின் மூலம் அரசாங்க திரைப்படத் துறை தொடங்கப்பட்டது. 1948 முதல், அரசாங்க திரைப்படத் துறை, உள்ளூர் இயக்குநர்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு இயக்குநர்களின் படைப்புகளைப் பாதுகாக்கும் தேசியப் பொறுப்பை நிறைவேற்றி வருகிறது.

 

அதற்காக சிறப்பு காப்பு முறைகளை பின்பற்றி, திரைப்பட ஊடகங்களில் தயாரிக்கப்பட்ட ஆவணப்பட நிகழ்ச்சிகளும் செய்தி ரீல்களும் அரச திரைப்படத் துறையின் காப்பக பிரிவின் மூலம் பாதுகாக்கப்பட்டன.

இராணுவத்தின் சிறப்புப் பங்களிப்புடன், சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் காப்பக அலகு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles