Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asunaro Aoki Construction Co Ltd ஒரு மில்லியன் ஜப்பானிய யென் நன்கொடை

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asunaro Aoki Construction Co Ltd ஒரு மில்லியன் ஜப்பானிய யென் நன்கொடை
  • :
 
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜப்பானில் உள்ள Asunaro Aoki Construction Co Ltd ஒரு மில்லியன் ஜப்பானிய யென் நிதி நன்கொடையை வழங்கியுள்ளது.

 குறித்த காசோலையை Asunaro Aoki Construction Co Ltd இன் பொது முகாமையாளர் Seiji Sakuraike அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சுவிடம் கையளித்தார்.

Asunaro Aoki Construction Co Ltd இன் பணிப்பாளர்/நிறைவேற்று அதிகாரி Shinsuke Murakami மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஜீவ லெவங்கமவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Related Articles