தம்புள்ள ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரல்
மத்திய மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற 'ஏ' தரத்தைக் கொண்ட மருத்துவமனையான தம்புள்ள ஆதார வைத்தியசாலை பிரதானமாக மாத்தளை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் வசிக்கின்ற 230,000 மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது. குறித்த மருத்துவமனையின் அடிப்படைச் சிகிச்சைச் சேவைகள் மற்றும் பிரதான விசேட நிபுணத்துவ மருத்துவ சேவைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுவதுடன், 354 நோயாளர் கட்டில்களுடன் கூடியது.
பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை உயர்தரத்துடன் வழங்குவதற்குப் போதுமான இடவசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு
இயலுமாகும் வகையிலும் மற்றும் 2022 2032 தம்புள்ளை அபிவிருத்தி பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கமைய. மருத்துவமனை அமைந்துள்ள காணியை பொருளாதார அபிவிருத்தி நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில், குறித்த மருத்துவமனையை வேறு இடத்தில் மீள் நிர்மாணம் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக 05 ஏக்கர் காணித்துண்டு தற்போது சுவீகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையை மீள் நிர்மாணம் செய்வதற்கான செலவு 07 பில்லியன் ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த செலவை ஈடுசெய்வதற்கு மாகாண சபைக்கு இயலாமையால், மருத்துவமனையை மத்திய அரசசின் நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வதற்காக மத்திய மாகாண ஆளுநர் உடன்பாடு வழங்கியுள்ளார்.
அதற்கமைய, தம்புள்ள ஆதார வைத்தியசாலையை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


