தற்போது நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

தற்போது நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது
  • :

 ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நடாத்தப்பட்ட விசாரணை தொடர்பில், மோட்டார் வாகனத் திணைக்களம் 17.02.2017 அன்று பதிவு இல GZ-6889 கொண்ட மோட்டார் வாகனத்தை மாற்ற முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

மேற்படி முறையற்ற அனுமதியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் தற்போது பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 12.02.2026 அன்று மு.ப 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Related Articles