தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது
  • :

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவரால் இரண்டு அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், சபையினால் செயல்படுத்தப்பட்ட கண்டி வடக்கு பாத்ததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் ஒப்பந்தப் பணத்திலிருந்து ஒரு டொயோட்டா பிராடோ SUV ரக ஜீப் வண்டி வாடகை அடிப்படையில் பி.என். ஆட்டோ ஹோல்டிங் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் விதிகளை மீறி செயல்பட்டு, குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியமை, குறித்த வாகனம் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்காமல், முறையான பற்றுச்சீட்டு பெறாமல் வாடகைப் பணமாக சுமார் ரூபா 12,750,000/- மேற்படி நிறுவனமான விநியோகஸ்தருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கொள்முதல் விதிகளை மீறி செயல்பட்டு, மேற்படி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பினை ஏற்படுத்தி ஊழல் குற்றம் புரிந்தமை மற்றும் அந்தக் குற்றத்தைச் செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஒருவர் 2026.02.12 அன்று மு.ப 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2026 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles