இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி நோக்கங்களை அடைவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் ஊகிக்கக்கூடிய வகையிலும் மற்றும் ஒத்திசைவான (Coherent) சுங்கவரிச் சட்டகமொன்றை நிறுவுவதற்காக தேசிய சுங்கவரிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்புடைய வரிகளுடன் தொடர்புடைய சட்டங்களுடன் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்தல் மற்றம் குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அக்கொள்கையை மீளாய்வு செய்து பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2025.11.03 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய சுங்கவரிக் கொள்கைக் குழுவால் அண்மையில் பொருளாதார, அரச நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் தொடர்பான தரவுகளுடன் ஏற்புடைய சட்டங்களுடன் முழுமையாக இணங்கியொழுகாத சுங்கவரிக் கொள்கையின் ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய சுங்கவரிக் கொள்கையின் குழப்பமான நிலைமைகளை நீக்குதல் மற்றும் கொள்கை ரீதியான ஏற்பாடுகள் மற்றும் நியதிச்சட்டத் தேவைகளுடன் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்தல் பற்றி பாராளுமன்றத்தில் அரச நிதி தொடர்பான செயற்குழுவால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்களும் குறித்த மீளாய்வின் போது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, தேசிய சுங்கவரிக் கொள்கைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொள்கையை அமுல்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


