'தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்' - 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு மூன்று நிக்காயவினதும் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரரர்களின் ஆசீர்வாதங்களுடன், மகாவிஹார பரம்பரையின் சியாமோபாலி மகாநிகாயவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் அதிவணக்கத்துக்குரிய மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான நாயக்க தேரரின் வழிகாட்டலின்படி பிரித் தர்ம உரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
அத்துடன், சர்வமத அனுஷ்டானங்கள் இன்று (04) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது.
கொழும்பு 03, பொல்வத்தவில் உள்ள தர்மகீர்த்தயாராமய விகாரையில் பௌத்த மத ஆராதனைகள் இடம்பெற்றன.
வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்தரிக்காளி கோவிலில் இந்து மத ஆராதனைகள் இடம்பெற்றன.
கத்தோலிக்க மத ஆராதனைகள் பொரளை புனித அனைவர் தேவாலயத்தில் இடம்பெற்றன.
கிறிஸ்தவ மத ஆராதனைகள் கொழும்பு 06, பிரேஸ்படேரியன் தேவாலயத்தில் இடம்பெற்றன.
வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய ஆராதனைகள் இடம்பெற்றன.
இதேவேளை, 77வது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள மாண்புமிகு டி.எஸ். சேனநாயக்க அவர்களின் உருவச்சிலைக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இன்று (04) காலை 6.00 மணியளவில் நடைபெற்றது.