58வது தேசிய புது அரிசி விழாவுடன் இணைந்து அம்பாறை மாவட்ட புது அரிசி விழா நேற்று (26) பல்லன்ஓயா விவசாய சேவை நிலையத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பிரதி விவசாய சேவை ஆணையாளர் சாமினி சோமதாச ஏற்பாடு செய்திருந்த இந்த புது அரிசி விழாவில், புது அரிசி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மகா சங்கத்தினரின் ஆசியுடன் சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.