"எக மிடட - கொவி பிமட" சர்வதேச உர தினத்தை முன்னிட்ட செயலமர்வு மற்றும் விற்பனைக் கண்காட்சி நேற்று (13) கேகாலை நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
இக்கண்காட்சியில் அரசின் புதிய விவசாய மானிய நிகழ்வுகள், பசுமை செய்கை முறையை அறிமுகப்படுத்தல், முன்னணி பல உரக் கம்பனிகள் பங்குபற்றலுடன் இலாபகரமான மற்றும் பசுமை நேய புதிய பரம்பரையில் மன்னேற்றப்பட்ட உர வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நடமாடும் ஆய்வுகூட சேவைகளினால் மண் பரிசோதனை வசதிகளும் வழங்கப்பட்டன.
இம்முறை நிகழ்வில் 2025 தேசிய உரச் செயலகத்தின் உரப் பயன்பாட்டை சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான கரிம வேளாண்மை மூலம் ஆரோக்கியமான தலைமுறைக்காக தங்கள் விவசாய நிலங்களை உற்பத்தி ரீதியாக பயிரிட்ட விவசாயிகளைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
தேசிய உரச் செயலகம் ஏற்பாடு செய்த இந்த தேசிய நிகழ்வை முன்னிட்டு 20இற்கும் அதிகமான அளவில் கண்காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கேகாலை நகர சபை தலைவர், மாவட்ட செயலாளர், விவசாய அமைச்சு மற்றும் தேசிய உரச் செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள், விவசாயிகள் சமூகம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


