கல்வி அமைச்சின் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மற்றும் தேசிய விருது வழங்கும் நிகழ்வு நேற்று (20) கல்வி அமைச்சில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.
தேசிய ஒலிம்பியாட் போட்டி, விஞ்ஞானம், கணிதம், தகவல் விஞ்ஞானம் மற்றும் புள்ளியியல்
ஆகிய பல்வேறு துறைகளில் இப்போட்டி நடாத்தப்படும்.
இந்தப் பாடவிதானங்களில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களை அடையாளம் கண்டு
ஊக்குவிப்பு, விடயங்கள் தொடர்பாக மேலும் தெளிவை அதிகரித்தல் மற்றும் சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேசிய அணியைத் தெரிவு செய்யும் நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி யில் மாகாண மற்றும் முழு இலங்கையிலும் வெற்றி பெற்ற 101 மாணவர்களுக்காக விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கும் நிகழ்வு இதன் போது இடம்பெற்றது.


