அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் காணப்படும் வெளியத்த கண்டிய பிரதேசத்திற்கு நீண்ட காலங்களுக்கு முன்னர் மூடப்பட்டிருந்த கைத்தறிப் புடவைக் கைத்தொழில் மத்திய நிலையம் மீண்டும் செயற்பாட்டுத்தரத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதனை திறந்து வைக்கும் நிகழ்வு
கடந்த வாரம் கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கமல் நெத்மினி தலைமையில் இடம்பெற்றது.
இந்தப் பயிற்சி நிலையத்தின் ஊடாக பிரதேசத்தில் உள்ள கிராமிய பெண்கள் தமது தொழில் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்வதற்கான மற்றும் கைத்தறி புடவைக் கைத்தொழிலுக்கு பாரிய பங்களிப்பை வழங்குவதாக அம்பாறை மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்நிகழ்வில் தெஹிஅத்தகண்டிய பிரதேச சபை மற்றும் கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.