தென் மாகாண சுகாதார வீரர்களின் "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா

தென் மாகாண சுகாதார வீரர்களின்   "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா
  • :

தென் மாகாண சுகாதார வீரர்களின் விலைமதிப்பற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் நடாத்தப்பட்ட "தெற்கு சுகாதார வீரர்கள் (தட்சிண சுவ விருவோ) – 2024 " விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (23) காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


தென் மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் " தெற்கு சுகாதார வீரர்கள் " நிகழ்வு, தென் மாகாணத்தில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கும் அவர்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் 203 சுகாதார நிறுவனங்களில் 9,000 இற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை கண்காணித்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தவர்கள் மற்றும் சிறந்த சுகாதார நிறுவனங்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இந்த ஆண்டு 11 வது முறையாக நடைபெற்றது.


இதன்போது, தென் மாகாணத்தில் B பிரிவில் சிறந்த வைத்தியசாலையாக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கும், A பிரிவில் சிறந்த வைத்தியசாலையாக காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கும், தென் மாகாணத்தின் சிறந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகமாக அம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கும் நினைவுப் பரிசுகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தாய் நல சுகாதார மன்றங்கள், பாடசாலை பல் மருத்துவ பிரிவு, முதியோர் பல் மருத்துவ பிரிவு, முதன்மை மருத்துவ பராமரிப்பு பிரிவு, சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவு, விசேட திட்ட பிரிவு, மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகங்கள், மாவட்ட வைத்தியசாலை A, B மற்றும் C பிரிவுகள், ஆதார வைத்தியசாலையின் A மற்றும் B ஆகிய 9 பிரிவுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன


"தெற்கு சுகாதார வீரர்கள் - 2024" விழா, தெற்கு மாகாண வைத்தியசாலை ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் எம்.கே. பந்துல ஹரிச்சந்திர, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். பி.டி. விமலசேன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சம்பிகா விக்ரமசிங்க உட்பட அதிகாரிகள், தென் மாகாண பிரதான அமைச்சின் செயலாளரும் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளருமான கிருஷாந்த டபிள்யூ. மகேந்திர, காலி மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ. தர்மசிறி, காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். பிரசாத் ரணவீர, மாத்தறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். மல்காந்தி மெதிவக, ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். தேவிகா படபெடிகே, முன்னாள் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் குடும்பநல சுகாதார பணியகத்தின் தற்போதைய பணிப்பாளர் விசேட மருத்துவர் சந்திம சிரிதுங்க, கராப்பிட்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட மருத்துவர் எஸ்.டி.யு.எம். ரங்க, தெற்கு மாகாண வைத்தியசாலை பணிப்பாளர்கள், சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த விசேட மருத்துவர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Articles