தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதன் போது தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்;
உற்பத்தித் திறனை அதிகரிக்காது எவ்வித கைத்தொழிலுக்கும் எதிர்காலத்தில் செல்ல முடியாது. அரிசி மற்றும் தேங்காய் பிரச்சினைகள் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படாமையினால் தான் ஏற்பட்டது. 800 மில்லியன் தேங்காய் ஏற்றுமதியாளர்கள் உள்ளார்கள். பல வருடங்களாக தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடையச் செய்தமையினால் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்காலிகமாக அவர்களின் ஏற்றுமதி செயற்பாடுகளுக்காக அவசியமான தேங்காய் பால், வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற உற்பத்திக்கு பதப்படுத்துவதற்குத் தேவையான மூலப் பொருட்களை வாங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவை பரிசீலிக்கப்பட்டு வரப்படுகின்றன. அது தவிர தேங்காய் இறக்குமதி செய்வதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன்றி அதில் எதிர்காலமொன்று இல்லை என்றும் அதற்காக அவசியமான பலம் மற்றும் தேவைப்பாடுகளை மேற்கொள்வது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.