புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கிளை ஊடாக, பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான நீண்டகால திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் சாதனங்களை வழங்குவதற்கு இணையாக, சீன மக்கள் குடியரசுடன் இணைந்து பாடசாலை அமைப்பில் மனித வள திறனை வளர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக நடத்தப்பட்ட வெளிநாட்டு பயிற்சி திட்டத்தின் முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
டிஜிட்டல் அரசாங்கக் கொள்கையை செயல்படுத்துவதன் கீழ் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் பாடசாலை வலய மற்றும் மாகாண மட்டங்களில் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள டிஜிட்டல் உருமாற்றத் திட்டம், இந்த நாட்டில் மனித வளங்களை மேம்படுத்துவதற்கான கல்வி முறைக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகும் என்பதுடன், அதன் முதல் சுற்றுக்காக 38 பேர் கொண்ட குழு வெளிநாட்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளது.


