திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் i) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுதல்

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் i) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் II) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுதல்
  • :

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் i) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் ii) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இரண்டு அரசுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் திட்டமாக இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனத்தின் கூட்டு தொழில்முயற்சி கம்பனியால் நிர்மாணித்தல், உரிமை வகித்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் இத் நிறுவப்படவுள்ளது.

திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலக்கரி மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின்சாரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றால் கூட்டு தொழில்முயற்சி கம்பனியாக நிறுவப்பட்ட வுசinஉழஅயடநந Pழறநச ஊழியலெ டுவன முலம் உத்தேச 50 மெகாவோற் கூரிய மின்னுற்பத்தி திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19.02.2025) நடைபெற்ற அமைச்சரவையில் உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]