தித்வா சூறாவளி 7 மில்லியன் மின்சார வாடிக்கையாளர்களில் 4 மில்லியன் பேரை நேரடியாக பாதித்தது.
உடனடியாக செயல்பட்ட மின்சார ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியுடன் மின்சாரத்தை மீட்டெடுக்கத் தொடங்கினர், மேலும் அறிவிக்கப்பட்ட மின் தடைகளில் 70% மற்றும் பின்னர் 85வீதத்தை ஐ மீட்டெடுக்க முடிந்தது.
மஹியங்கனையின் ரந்தம்பேயில் உள்ள 132 kv மின் பரிமாற்ற அமைப்பின் பிரதான கோபுரம் முழுமையாக இடிந்து விழுந்ததும், வயரிங் அமைப்பில் பெரும் சேதமும் ஏற்பட்டதே மின்சார உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சேதமாகும்.
இருளில் மூழ்கியிருந்த மஹியங்கனை பகுதியிலும், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தற்காலிகமாக 33,000 kv இணைப்பு மூலம் மருத்துவமனைகள் மற்றும் நீர் பம்பிங் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மின்சார சபை ஊழியர்களினால் இயன்றளவு மின்சாரத்தை வழங்க முடிந்தது,
டிசம்பர் 06 ஆம் திகதி பிற்பகலில், மின் இணைப்பு கோபுரம் மற்றும் கேபிள் பாதையில் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்தன, கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
நேற்றைய (08) நிலவரப்படி, சுமார் 99வீதமான மின் தடைகள் ஏதோ ஒரு வகையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


