தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை- ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை- ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில்
  • :

தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவை இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை நாடு பூராகவும் காணப்படுகின்ற மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும் இடம்பெறும்.

தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் ஊழியர் சேமலாப நிதி கணக்குத் தகவல்கள் மற்றும் மிகுதியை சரிபார்த்தல், தேசிய அடையாள அட்டையின்படி தவறான உறுப்பினர் கணக்குத் தகவல்களைச் சரிபார்த்தல், உறுப்பினர்களைப் பதிவு செய்தல், முறைப்பாடுகளை பெறுதல் மற்றும் தொழில் சட்டங்கள் குறித்த ஆலோசனைகளைப் பெறுதல் போன்ற விடயங்கள் இந்த நடமாடும் சேவை ஊடாக வழங்கப்பட்டவுள்ளன.

இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் போது, ​​சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகள், தற்போது ஊழியர் சேமலாப நிதியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் பி அட்டை, திருத்தங்களைச் செய்ய விரும்புவோர் தொழில் தருநரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட தொழில் அலுவலகங்களுக்குச் செல்லுமாறு தொழில் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

இந்த நடமாடும் சேவையின் ஆரம்ப விழா இன்று (22) யாழ்ப்பாண மாவட்ட தொழில் அலுவலகத்தில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இடம்பெற உள்ளது.
தொழில் அமைச்சு

Related Articles