துருக்கி குடியரசின் கல்வி அமைச்சர் நாட்டுக்கு வருகை

துருக்கி குடியரசின் கல்வி அமைச்சர் நாட்டுக்கு வருகை
  • :

இலங்கை மற்றும் துருக்கி குடியரசு கிடையே காணப்படும் பொருளாதார மற்றும் ஒத்துழைப்புக்காக ஒருங்கிணைந்த குழுவின் மூன்றாவது அமர்வில் கலந்து கொள்வதற்காக துருக்கி குடியரசின் கல்வி அமைச்சர் யூசுப் டெக்கின் (Yusuf Tekin) உட்பட்ட தூதுக்குழுவினர் இன்று (24) அதிகாலை நாட்டுக்கு வந்தனர்.

வர்த்தக , வாணிபத்துறை , உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர் எம் ஜெயவர்த்தனவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விருந்தினர்களை வரவேற்கும் பகுதியில் அவரை வரவேற்றார்.

 

இதன் போது இலங்கையில் உள்ள துருக்கி குடியரசுக்கான தூதுவர் செமி லுடிபு டர்குட்டி கலந்து கொண்டார்.

வர்த்தக அமைச்சின் கீழ் காணப்படும் வர்த்தக திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வமர்வு கொழும்பில் இன்று (24) நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மேலும் பல பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles