உலக அமைதி வேண்டி நடத்தப்படும் "ஏஹி பஸ்ஸிகோ" அமைதிக்கான நடைப்பயணம் இன்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் நடைப்பயணம் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த சுமார் 45 கி.மீ தூரத்தை நிறைவு செய்து, மாத்தளை அலுவிஹாரையை தேரர்கள் குழு வந்தடைந்தது.
இந்த நடைப்பயணத்தில் பங்கேற்கும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினரைத் தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பாதையோரங்களில் திரண்டிருந்தனர். தேரர்களின் பயணத்தை இலகுவாக்கும் வகையில் வீதியெங்கும் வாழை இலைகளை விரித்து வைத்ததோடு வெயிலினால் சூடாகியிருந்த பாதையைக் குளிர்விப்பதற்காக மக்கள் வீதிகளில் குளிர்ந்த நீரைத் தெளிக்க நடவடிக்கை எடுத்தனர்.


