உலகளாவிய சுகாதார சேவைகளின் முன்னேற்றத்திற்கான வலுவான மற்றும் சிறந்த வழிகாட்டுதல்களுடன் 79வது உலக சுகாதாரப் பேரவை நிறைவடைந்தது
இலங்கையின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் மற்றும் சிறந்த அங்கீகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 79 ஆவது உலக சுகாதார பேரவை கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகி 7 நாட்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) வெற்றிகரமாக நிறைவடைந்தது. “'சுகாதாரத்திற்கான உலகம்'” “One world for Health” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த உலக சுகாதார மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய மாநாட்டின் தலைவர் திரு.நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் மாநாட்டை வெற்றிகரமாக நிறைவுசெய்து கொண்டு நேற்று (22) நாடு திரும்பினர். ********
194 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பங்கேற்ற 79வது உலக சுகாதார மாநாடு நடைபெற்றது. மே 18 அன்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மாநாட்டில் உரையாற்றினார்.
79வது உலக சுகாதாரப் பேரவையில், உலக சுகாதார அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட தரநிலைகள் மற்றும் உலகளாவிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், Dr.TedrosAdhanom Ghebreyesus சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர்.
நளிந்த ஜெயதிஸ்ஸவிற்கு ஒரு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இலங்கையில், ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) நோய்களின் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவும் தன்மையை, ஆபத்து இல்லாத அல்லாத ஒரு நிலைக்குக் குறைத்ததன் மூலம் சுகாதாரத் துறை அடைந்த முன்னேற்றத்தைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒரு மாபெரும் சாதனையாகும்.
உலக சுகாதார மாநாட்டுடன், உலக சுகாதார அமைப்பின் குழந்தை பருவ புற்றுநோய்க்கான உலகளாவிய முன்முயற்சி (WHO Global Initiative for Childhood Cancer - WHO GICC) ஏற்பாடு செய்த சிறப்பு அமர்வும் காமன்வெல்த் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள மூத்த அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
மேலும், இலங்கைப் பிரதிநிதிகள் பல சிறப்பு அமர்வுகளில் கலந்து கொண்டனர். அந்த அமர்வுகளில், மனநல மேம்பாடு (Health investment) மற்றும் தற்கொலை தடுப்பு உத்திகள், பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டினால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுப்பதில் (Pesticide suicide prevention) இலங்கை பெற்ற வெற்றி மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது என்பன அந்த அமர்வுகளின் பிரதான விடயங்களாக இருந்தன.
இந்த மாநாட்டையொட்டி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட குழுவினருடன் இணைந்து பூட்டான், தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடனும், ஜப்பானின் நிப்பான் அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போது பங்கேற்ற தூதுக்குழுவினர், இப்பயணத்தின் போது பெறப்பட்ட அனுபவங்கள், அறிவு, மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை நாட்டில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று நம்புகின்றனர்.
மேலும் இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுடன் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய நிபுணர். அனில் ஜசிங்கவும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் பிரதி பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன், அவர்களும். வைத்தியர் சமித்தி சமரகோன், திட்டமிடல் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதான பத்திரன, வைத்திய சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


