Thu, Jul 23, 2026

வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றில் கூடியது

வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றில் கூடியது
  • :
வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா அவர்களின் தலைமையில் 2026.02.18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் வலுசக்தித் துறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.

 இந்த உபகுழு மின்சாரத்திற்கான கேள்வி முகாமைத்துவம் (DSM), கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமைகள், LTL ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சாரம் (தனியார்) நிறுவனத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், சூரிய சக்தி சமர் திட்டம் மற்றும் வலுசக்தி மூலமாக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராய்ந்தது.

இந்த உபகுழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களைத் தலைமையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவாகும்.

Related Articles