நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
2025 மார்ச் மாதம் 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மார்ச் மாதம் 08ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் வறண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நாடு பூராகவும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகலில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.
நாடு பூராகவும் காலை வேளையில் ஆங்காங்கே பனி மூட்டமான நிலை காணப்படும்.