2025 மார்ச் மாதம் 22 ஆம் திகதிக்கான காலநிலை எதிர்வு கூறல்
மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணி அளவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யலாம்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்தி மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக கடும் காற்று மற்றும் இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக அவசியமான முறையில் செயற்படுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.