மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யலாம்.
வடமேல் மாகாணத்திலும் சிறிய அளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (50-55) கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது


