வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்தோனேசிய தூதுவர் பாராட்டு

  • :

இந்தோனேசியாவின் இலங்கைக்கான தூதுவர் திவி குஸ்டினா டோபிங் ( Dewi Gustina Tobing ) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணில இடையிலான சந்திப்பு அண்மையில் பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

அபிவிருத்தி இலக்கை வெற்றி கொள்வதற்கான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் இலங்கையில் வறுமை ஒழிப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகப் பாராட்டிய தூதுவர் எதிர்காலத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சுட்டிக்காட்டினார்.

அங்கு அமைச்சர், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கை இந்தோனேசியா இடையே காணப்படும் ராஜதந்திர தொடர்புகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளப்படும் வேலைத்திட்டம் குறித்து தூதுவருக்குத் தெளிவு படுத்தினார்.

இந்தோனேசியா நாட்டின் 80வது சுதந்திர நிகழ்வுகளுக்காக இலங்கையின் இந்தோனேசியா கவுன்சிலர் அலுவலகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு அமைச்சருக்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தோனேசிய தூதுவராலயத்தின் அரசியல் இணைப்பாளர் Laial K. Unniarti வும் பங்கேற்றார்.

Related Articles