வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் - அமைச்சரவை பேச்சாளர் 

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் - அமைச்சரவை பேச்சாளர் 
  • :

அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அம்மாகாணங்களின் கிராமிய வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்றவற்றிற்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

 

பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்செயற்பாடுகள் பல்வேறு அமைச்சுகளுக்கு ஊடாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

 

முப்பது ஆண்டுகள் யுத்தத்தை எதிர்கொண்ட அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விபரித்தார்

Related Articles