வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் முதலீட்டாளர்களின் தொடர்புகளைக் கட்டியெழுப்பும் மாநாடு குருணாகலில்

வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் முதலீட்டாளர்களின் தொடர்புகளைக் கட்டியெழுப்பும் மாநாடு குருணாகலில்
  • :
 
இலங்கை ஏற்றுமதிச் சபை (EDB) யினால் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஏற்றுமதியாளர்களின் தொடர்புகளை கட்டி எழுப்பும் மாநாடு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் அண்மையில் (03) குருநாகலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பிரதேச ஏற்றுமதியாளர்களின் திறமைகளை முன்னேற்றுதல் மற்றும் தேசிய ஏற்றுமதி உபாய வழிகளுக்காக அவசியமான பங்களிப்பை கொள்ளும் மூக்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் அதிகளவான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
 
பிரதேச ஏற்றுமதியாளர்களுக்கு அரச நிறுவனங்கள் மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களுடன் தொடர்பாடல் வலிகளை உருவாக்குதல் இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
 
சுங்க செயன்முறை, சட்ட மற்றும் நிருவாக பிரச்சினைகள் மற்றும் சந்தை நுழைவு தொடர்பான சவால்களை கலந்துரையாடி பிரயோக தீர்வு ஒன்றை காண்பதற்கு இந்த மாநாடு வழி வகுத்தது.
 
முதலீட்டாளர்கள் இடையே அறிவுகளைப் பரிமாற்றிக கொள்ளுதல் மற்றும் வியாபாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு முக்கியமான வசதிகளை வழங்குதல் போன்ற பிரதேச ஏற்றுமதி தொழில் முயற்சியாளர்களின் உண்மையான அவசியத்தின் அடிப்படையில் கொள்கை விருத்திக்கு பங்களித்தல் இதன் நோக்கமாகும்.

Related Articles